LIVING WATER -PART:1
*Jesus is the Living Water. His words in the gospel provide us the living water!* *1. முன்னுரை: துவக்கத்திலேயே அறிந்துகொள்வோமா!* நமக்கு இந்த படிப்பினையின் மூலம் கிடைக்கும் நல்ல செய்தி என்னவென்றால் இந்த உலகத்திலேயே நமக்கு வல்லமை மிகுந்த ஜீவத்தண்ணீர் கிடைக்கிறது. பரலோகத்தில் வாசம் பண்ணும் பரிசுத்தவான்கள் பருகும் அதே ஜீவத்தண்ணீர் நமக்கு இங்கேயே இலவசமாகக் கிடைக்கிறது. இயேசுதான் ஜீவத்தண்ணீரை நமக்குத் தருகிறவர். அவரே ஜீவத்தண்ணீர். அவருடைய வசனமே ஜீவத்தண்ணீர். இந்த ஜீவத்தண்ணீர் மட்டுமே நமக்கு நித்திய ஜீவனைத்தருகிறது. 2000 வருடங்களுக்கு முன்னர் அவர் இஸ்ரவேல் தேசத்தில் நடையாய் நடந்து இந்த ஜீவத்தண்ணீரை வாரி வழங்கினார். அது இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறது. இயேசுவின் வசனமே ஜீவத்தண்ணீர்! மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய 4 சுவிசேஷப் புத்தகங்களில் இந்த ஜீவத்தண்ணீர் நமக்கு அள்ள, அள்ளக் குறையாமல் கிடைக்கிறது. இந்த ஜீவத்தண்ணீர் பாயுமிடமெல்லாம் நித்திய ஜீவனும், ஆராேக்யமும் இருக்கிறது. இதனை வசனங்கள் மூலம் கண்டறிவோமா? *2. இந்த உலக வாழ்விலேயே நமக்கு ஜீவத்தண்ணீர் கிடைக்கிறதா?:...