HOW TO LOVE JESUS CHRIST

நண்பர்களே! தங்கள் அணைவரையும் இயேசுகிருஸ்த்துவின் நாமத்தினால் வரவேர்க்கின்றேன். இந்த படிப்பினையானது, கிருஸ்த்துவை எப்படி நேசிப்பது. எங்கின்ற தலைப்பின்கீழ் வெளியிடுகிறோம். உடனடியாக சில கேள்விகள், உங்களிடம் எழுலாம். இயேசுவை நேசிக்காமலா அவரை நாங்கள் விசுவாசித்து ஆராதிக்கின்றோம். என்று. அதற்காண விளக்கங்களையும், உங்களுக்கு நாங்கள் தருகின்றோம். பொதுவாக எடுத்துக்கொண்டால் இந்துக்களிடம் சென்று உங்களுக்கு இயேசுவை பிடிக்குமா என்று கேட்டால் அவர்கள் அணைவரும் பெரும்பான்மையாக பிடிக்கும்மென்றே சொல்வார்கள். ஆகமட்டில் இயேசுவை நாம் அணைவரும் நேசிக்கின்றோம் என்று சொல்லுவதைவிட நாம் உண்மையில் அவரை நேசிக்கின்றோமா என்று பகுத்தரிவது அவசியமான ஒன்று. சரி சத்திய வேதம் இயேசுவை நாம் எவ்வாறு நேசிப்பது என்று மிகத்தெளிவாக விவரிக்கின்றது. உதாரனமாக
 நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள். யோவான்:15:14

மேற்கூறிய இந்த வார்த்தையின்படி புதிய உடண்படிக்கையின் உபதேசங்களாகவும் இயேசுகிருஸ்த்துவின் கட்டளைகளாகவும் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல். பழைய ஏற்பாடு காலங்களில் நடந்த சம்பவங்களை மட்டும், விவரித்துக்கொண்டும், இயேசு கிருஸ்துவின் கட்டளைகள் என்னவென்று பரப்புரை செய்யாமல் உன்மையான சுவிஷேசத்தை மாற்றி தற்போதைய கிருஸ்தவர்களிடையே ஒரு சரியான புரிதலின் மனநிலையை முற்றிலும் அடைத்திருக்கிறார்கள் என்பதே எங்களின் ஆய்வின் முடிவாகவுள்ளது.

 மேலும் பனம், பொருள், செல்வந்த நிலைபாடு. பெயர், புகழ், ஆடம்பர இல்வாழ்வு போன்றவைகளை. பெற்றுகொள்கிற அடிப்படையிலேயே ஆசீர்வாதமானது இருப்பதைப்போல் தவறான பிம்பமானது காட்டப்படுகின்றது.

மேலும். யோவான்:15:13ல் ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
என்று அன்பே உருவான இயேசு கிருஸ்த்துவின் அன்பினை விளக்குகிறது. ஆக ஒவ்வொரு மனுகுல ஆத்துமாக்களும் மீட்பினை பெரும்படியான மனந்திரும்புதளுக்கேற்ற இரட்சிப்பினை அடையும்படி, அன்டசராசரங்களுக்கும் அதிபதியானவர். அடிமையின் ரூபமெடுத்து ஆத்துமாக்களை மீட்படைய செய்தார்.

மேலும் ரோமர்:5:10ன்படி நாம் அவருக்கு சத்துருக்களாய் இருக்கையில் நம்மை சினேகித்த சினேகம், இயேசுவையேயன்றி வேரொருவராலும் செலுத்த முடியாது. மேலும் தன் ஆடுகளுக்காய் ஜீவனை கொடுத்தவராகவும், என்றும் நம்முடனே இருக்கும் இம்மானுவேலராகவும். நம்மை நீங்காது காதலிக்கும் காதலராகவும். காதலாகவும் இருப்பதை அவரின் வார்தைகளினாலும் அவ்வார்த்தைகளின் கட்டளைகளாகவும் இருப்பதை கைக்கொண்டு நடப்பதின் மூலமாகவே நாம் அவரை நேசிக்கும் நேசத்தை காண்பிக்க முடியும்.

இறுதியாக பிறர் நலம் கருதுவதும் பிறரிடம் அன்பு செலுத்துவதும், சமமான பார்வையும், கபடற்ற பேச்சுக்களும், ஏழைகளுக்கு உதவுவதுமே இயேசுவை நேசிக்கும் நேசம் எனவும், உலக ஐஸ்வர்யங்களை ஆசீர்வாதமென சொல்லப்படும் மாபெரும் பொய்களை விட்டொழிந்து, மத்தேயு:16:32ன்படி அறிவற்ற ஏக்கங்களை மனதிர்கொள்ளாமல்.

அழிந்துபோகும் கூடுகளுக்கு ஆடம்பர வீடுகள் சேர்க்காமல், அழிவில்லா ஆத்துமாவை அனுதினமும் காத்துக்கொள்வதே. இயேசுவை நேசிக்கும் நேசம் என்று. உனர்ந்துக்கொண்டு இயேசுவுக்கு சீஷராக வாழ்வோம் சீஷத்துவம் செய்வோம். இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்………!



FOR CONTACT US: DISCIPLE OF CHRISHT BIBLICAL RESEARCH TEAM –INDIA
FOR MORE DEATIALS: ajithbenihin007@gmail.com [ ajithbenihin blogspot.com


Comments